newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 19 October 2014

தமிழர்களுக்கு ஆதரவான நிலை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது ராஜபக்சே தாக்கு

கொழும்பு:20.10.2014 
என்னை ஆட்சியில் இருந்து நீக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுடன் இணைந்து பணிபுரிகின்றது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்கி பேசியுள்ளார்.

கொழும்புவில் சுகாதாரத் துறை ஊழியர்களிடம் உரையாற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, “அவர்கள்(எதிர்க்கட்சிகள்) என்னை ஆட்சியில் இருந்து நீக்க வெளிநாட்டுப் படைகளுடன் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஐரோப்பா சென்று அவர்களை சந்திக்கின்றனர். அவர்கள் புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.” என்றார்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு  ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதில், 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், லக்சம்பர்க் நாட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு விசாரித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை நீக்கி கடந்த 16-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ராஜபக்சே “ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கை எதிர்க்கட்சி தலைவர்கள், புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய 2 வாரங்களில் இது நடந்துள்ளது”. என்று கூறியுள்ளார்.

ஒருபுறம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள அவர்கள் இலங்கையின் மீன் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் இலங்கையில் இருந்து மீன்ஏற்றுமதி செய்ய தடைசெய்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து மீன் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது. சர்வதேச மீன்பிடி கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத காரணமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தை, உள்நாட்டு அரசியலுடன் இணைக்க முயற்சி செய்கிறார்.

No comments:

Post a Comment